கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 490 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் கஞ்சாவை லொறியில் கொண்டு செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.