உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் ஊடகங்களுக்கு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு விரைவில் நிர்ணயிக்கும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.