அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தான் எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று (22.02.2025) நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றபோதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விளம்பர நிகழ்ச்சி நேற்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த நாமல் ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க அரசாங்கம் கலைக்கப்படும் எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Related posts

மொட்டு எம்.பி. அவல நிலை வாழ்நாளில் அரசியலுக்குள் வரவேமாட்டேன்

wpengine

இளவரசி டயானாவின் இறப்பின் இரகசியம் வெளிவந்தது

wpengine

யாழ் தாவடி கத்திக் குத்து, ஒருவர் பலி!!! சந்தேக நபர் கைது!!

Maash