பிரதான செய்திகள்

“நாட்டு மக்களின் பொதுப் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு” சஜித்துக்கு பதிலளித்த அமைச்சர்.!

அண்மைய பாதாள உலக நடவடிக்கைகள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் செயல் என்பது இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொது பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த ஒவ்வொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

“நாட்டு மக்களின் பொதுப் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு, மேலும் தேசியப் பாதுகாப்பில் எந்தச் சீர்குலைவையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் இந்த பாதாள உலக நடவடிக்கைகள் தீவிரமடைவது குறித்து அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.”

Related posts

20ல் வடக்கு,கிழக்கில் வாழும் சிறுபான்மைக்கு பாதிப்பு YLS ஹமீட்

wpengine

சிங்கள குர்ஆன் மொழியாக்கம் அன்பளிப்பு (படம்)

wpengine

யாரை திருப்திபடுத்த முயற்சிக்கின்றார் மூத்த ஊடகவியலாளர் மீரா ?

wpengine