அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வடக்கிற்கான வரவு செலவுத்திட்டமே இது, இதட்கு எதிர்க்கட்சியில் சந்தோஷப்படும் ஒரேயொரு நபர் நானே !

இம்முறை வரவு செலவுத்திட்டத்தை நாம் வடக்கிற்கான வரவு செலவுத்திட்டமாவே கருதுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட விவாதத்தை உண்மையாவே யாழ்ப்பாணத்தில் பிறந்த சாதாரண மனிதர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை விடயங்களை எங்களது ஜனாதிபதி தந்திருக்கின்றார் என்பதிலே எதிர்க்கட்சியில் இருந்து சந்தோஷப்படக்கூடிய ஒரேயொரு மனிதன் நானாகத்தான் இருப்பேன்.

என்னை பொறுத்தவரையில் எனக்கு அரசியல் தேவையில்லை. நான் அரசியலுக்காக அரசியல் செய்ய வரவில்லை. ஆகவே இந்த மக்களுடைய தேவைகளை அறிந்து வைத்து எமது பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களும் ஜனாதிபதி அவர்களும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததையிட்டு நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். இதனை நாங்கள் வடக்கிற்கான பட்ஜெட்டாவே நாம் கருகிறோம் என்றார்.

Related posts

மாந்தை மேற்கு பிரதேசத்தில் 800 ஏக்கர் காணிக்கு போலி ஆவணம்! வெளிநாட்டு நிறுவனம் அன்னாசி தோட்டம் பிரதேச செயலாளர் குற்றச்சாட்டு

wpengine

அடிப்படை வாதிகளை திருப்பதிப் படுத்த முஸ்லிம் அரசியல் தலைவருக்கு எதிராக பிரச்சாரம்

wpengine

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஓதுக்கீட்டில் தளபாடங்கள் கையளிப்பு

wpengine