செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கிரிக்கெட் விளையாடப்படாமல் இருக்கும் பாடசாலைகளில் ஆரம்பிக்கும் திட்டம், வடக்கில் இருந்து ஆரம்பம் .

இலங்கையில் கிரிக்கெட் விளையாடப்படாமல் இருக்கும் பாடசாலைகளில்   கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பிக்கும் திட்டத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்தத் திட்டம் முதன்முதலில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் முதலாவது நிகழ்ச்சி விளையாட்டுத்துறை அமைச்சரின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது, கிரிக்கெட் விளையாட்டில் இதுவரை ஈடுபடாமல் இருக்கும் வட மாகாணத்திலுள்ள 47 பாடசாலைகளுக்கு அமைச்சரினால் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ‘கிராமப் புறங்களில் இயங்கும் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். சகவாழ்வை மேம்படுத்துவதற்கான முக்கிய வழிமுறையாகவும் விளையாட்டைப் பயன்படுத்தலாம். எனவே, இந்த திட்டத்தை வட மாகாணத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டது’ என்றார்.

பலம்வாய்ந்த தேசிய கிரிக்கெட் அணியை உருவாக்குவதற்கும் மனித வளங்களை அடையாளம் காண்பதன்மூலம் கிரிக்கெட் விளையாட்டை மிகச் சிறப்பாக வளர்க்கும் குறிக்கோளுடன் பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1500 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி பணிப்பாளர், வட மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் மற்றும் 47 பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர்  இந்த நிகழ்வில்   கலந்துகொண்டனர்.

Related posts

இலங்கை – இந்தியா பாலம் அமைச்சர் கபீர் ஹசீம்

wpengine

மூடப்பட்ட கிணற்றில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்! மனிதப் புதைகுழி

wpengine

அரசியல் கட்சி ஒன்றின் கொள்கைக்காக ஞானசார குரல் கொடுக்கின்றார்.

wpengine