செய்திகள்பிரதான செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ். நூலகம் எரிக்கப்பட்டமைக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்குரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (17)  நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வரலாற்றில் ஒரு காலத்தில் வாக்குகளுக்காக நூலகங்கள் எரிக்கப்பட்டன. யாழ்ப்பாண நூலகத்திற்கும் அதுதான் நடந்தது.

யாழ்ப்பாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களும் வாசகர்களும் யாழ்ப்பாண நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர்

யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவமானது தமிழ் மக்களின் மனதில் ஆறாத வடுவாக உள்ளது.

யாழ்ப்பாண நூலகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நூலகங்களின் மேம்பாட்டுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்“ என ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் சிறீதரன் முறைப்பாடு

wpengine

இரண்டு கட்சிகளும் நாட்டை முன்னேற்றவில்லை திஸாநாயக்க

wpengine

மறைந்திருந்து ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது நல்லாட்சியின் அதிசயம் -இக்பால் நப்ஹான் விசனம்

wpengine