பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் காய்ச்சலினால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த பெண் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்போது விடத்தல்பளை, மிருசுவில் பகுதியைச் சேர்ந்த நடராசலிங்கம் புஸ்பராணி (வயது 67) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் 

குறித்த பெண் கடந்த 08 – 11ஆம் திகதி வரை காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 11ஆம் திகதி சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related posts

முசலி பிரதேசத்தில் 50வீடுகள்! முதல் கட்டம் 11வீடுகள்

wpengine

அபாயா அணிந்த முஸ்லிம் பெண் உழியர்களுக்கு புடவை கட்டிபார்த்த மன்னார் மாவட்ட செயலகம்

wpengine

கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மன்னார் மாவட்டம்!

Editor