பிரதான செய்திகள்

கிங் கங்கை பெருக்கெடுத்ததால் காலியில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன

கிங் கங்கை பெருக்கெடுத்ததால் காலி மாவட்டத்தின் தாழ்வான பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக உடுகம – பத்தேகம மற்றும் உடுகம – நெலுவ பாதைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, தவலம பிரதேசத்தில் உள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்கு அதிவேக பாதையில் வெலிப்பனை நுழையும் பாதையின் அருகில் உள்ள
பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் வெலிப்பனை நுழையும் பாதையை மூடவேண்டிய நிலை ஏற்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனோடு அதிவேக பாதையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் வாகனத்தை கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் செலுத்துமாறு அந்த சபை கோரியுள்ளது.

Related posts

வட்அப் குருப் அட்மீனுக்கு எதிராக (சி.பி.ஐ) விசாரணை

wpengine

EPF-ETF மனு விசாரணையின்றி நிராகரிப்பு!

Editor

அல்-கொய்தாவின் நகர்வும், அமெரிக்காவினால் அல்-குர்ஆன் விநியோகமும், சோவியத்தின்வீழ்ச்சியும்.

wpengine