செய்திகள்பிரதான செய்திகள்

போலி 5000 ரூபாய் நாணையத்தாள் ஐந்துடன் பெண் உட்பட இருவர் கைது.!

பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் ஐந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரின் விசாரணையில், சந்தேக நபர்கள் இருவரும் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

24 கடற்கரையோரப் பிரதேசங்!களில் முதலீடு செய்ய வாய்ப்பு!

Editor

10மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

wpengine

20க்கு அதாவுல்லா,அமைச்சர் டக்களஸ் கட்சிகள் ஆதரவு

wpengine