பிரதான செய்திகள்

அதிகரிக்கும் சுவாசப் பிரச்ச்க்கணைகள், அவதானமாக இருக்கவும் .!

இலங்கையில் தற்போது சுவாச ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுவாசப்பிரச்சினைகள் குறித்து சிறுவர்கள், கர்பிணித்தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முன்பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்களுக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களினூடாக அவர்களின் வீட்டில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் இந்த நிலை பரவக்கூடும்.

அத்துடன், வீடுகளில் இருக்கும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

சிறுநீரக பாதிப்பு, நீண்ட கால நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் தற்போதைய காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Related posts

பொதுபல சேன ஜனாதிபதி கவலை

wpengine

இரண்டு நீதிபதிகள் பதவிப் பிரமாணம்!

Editor

ஓர் இனவாதியாகச் சித்தரித்து, அபாண்டங்களை பரப்புவோருக்கு றிஷாட் கொடுத்த சாட்டையடி

wpengine