கிளிநொச்சிசெய்திகள்பிராந்திய செய்தி

காதலர் தினம் கொண்டாட மறுத்த காதலி, உயிரை மாய்த்துக்கொண்ட கிளிநொச்சி இளைஞ்சன்.

காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (12) கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்த வருடம் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று வர அவர் தனது காதலியை பலமுறை கேட்டதாகவும், எனினும் பெண் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

சம்பவம் நடந்த நாளில், அந்த இளைஞன் தனது காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்காமல் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்குள்ளான இளைஞர், கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை தர்மபுரம் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

ஆடத் தெரியாதவன் அரங்கை கோணல் என்டானாம் என்ற கதை போன்றே மாகாண சபை உறுப்பினர் நஸீரின் பேச்சு

wpengine

சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்ட இடங்களை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் ,

Maash

வவுனியாவில் நூலகம் திறந்து வைப்பு

wpengine