அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டம் ஜனாதிபதி தலைமையில்.!

எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்தின் பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Related posts

முஸ்லிம் ஆசிரியைகளுக்கு, இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் இந்த இடமாற்றம் தற்காலிகமானது

wpengine

வசீம் தாஜூடீன் மரணம்! பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு

wpengine

வார்த்தை போர்! அமெரிக்காவின் முயற்பாடுகளை கவனிக்க வடகொரியா தீர்மானம்

wpengine