அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மஹிந்தையின் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது .

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள காவலர் பிரிவுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 இலட்சம் ரூபா கட்டண நிலுவையை செலுத்தாத காரணத்தாலே நீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி வசிக்கும் பிரதேசத்தில் நீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை.

குறித்த சொத்துக்கான நீர் கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்

Related posts

அபிவிருத்தி என்பது பெயருக்காக மாத்திரம் செய்யப்படுவதல்ல ஷிப்லி பாறுக்

wpengine

மஹிந்த அரசின் பங்காளிகளாக வருமாறு முஸ்லிம்களுக்ககு அழைப்பு

wpengine

65,000 வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலகங்களில் கருத்துப் பெட்டி

wpengine