அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

இழப்பீட்டு விபரங்களை வெளியிடும் தரப்பினர்கள் எமது வீடுகளுக்கு தீ வைத்தார்கள். தீ வைத்தவர்கள் விபரங்கள் எங்கே ?

அரகலய வன்முறையில் தனது  வீடு தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ஆளும் தரப்பினரே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குற்றம் சுமத்தியுள்ளார்.

வீட்டை புனரமைக்க 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன் எனவும், இதில் யாருக்கு என்ன பிரச்சினை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 

“மே 09 வன்முறையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் தான் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

150 மில்லியன் ரூபா செலவழித்து நான் வீட்டை நிர்மாணித்தேன். கலவரத்தின் போது எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

ஆகவே வீட்டை நிர்மாணிப்பதற்கு 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன். இதில் யாருக்கு என்ன பிரச்சினை.

இழப்பீட்டு தொகை பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் தரப்பினர்கள் தான் எமது வீடுகளுக்கு தீ வைத்தார்கள்.

முடிந்தால் அவர்களின் பெயர்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்” என்றார்.

Related posts

‘சிங்ஹ லே’க்கு மாற்றீடாக வாகனங்களுக்கு நல்லிணக்க ஸ்டிக்கர்

wpengine

மன்னார் -நானாட்டான் மாட்டுவண்டி பிரச்சினை இருவர் உயிரிழந்துள்ளனர்.

wpengine

சுசந்திகா ஜயசிங்க வைத்தியசாலையில்! கணவர் கைது

wpengine