செய்திகள்பிரதான செய்திகள்

நாட்டில் தேங்காய் தட்டுப்பாட்டை உண்டாக்கிய குரங்கு இன்று மின்சாரத்தை கட்டுப்படுத்தியது .

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல இடங்களில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் குரங்குகளின் ஆதிக்கத்தால் தேங்காய்கள் மரத்திலையே வீணடிக்கப்படுகின்றது ஆகையினால் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணம் என்று விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Related posts

ராஜஷ்சவின் புதிய அமைச்சரவையில் நசீர் அஹமட் சுற்றுச்சூழல் அமைச்சர்

wpengine

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

Editor

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுநர் கைது..!

Maash