செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகம் !

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது ,தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை வடக்கில் வவுனியாவில் மட்டுமே கடவுச்சீட்டு அலுவலகம் உள்ள நிலையில், மக்கள் கடவுசீட்டை பெற பெரிதும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி அனுர குமார யாழ்ப்பாணம் வந்திருந்தபோது , யாழிலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாவில்லு வர்த்தகமானி அறிவித்தல்! தகவல் பெறாத ஆணைக்குழு

wpengine

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு!

Editor

மனைவியை சுட்டுக் கொன்ற கணவன், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணம்.

Maash