செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்கரையில் 1 கிலோ கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்கரையில் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, ஒரு கிலோ கிராம் கொக்கேயின் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர், மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related posts

கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் மாயம்!

Editor

முப்படைகளின் தளபதிகள் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

Maash

மருதங்கேணி சமுர்த்தி உத்தியோகத்தரின் நியாயமற்ற இடமாற்றம்

wpengine