அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

“கடிதம் எனக்கு கிடைத்துள்ளது” .லசந்த படுகொலை தொடர்பில் புதிய விசாரணை. பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பித்து, மேலும் சாட்சியங்களை சேகரிக்க வேண்டுமாயின், அதனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று, பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

லசந்த விக்கிரமதுங்கவின் மகன் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்,  வெள்ளிக்கிழமை (07) சபையில் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே, பிரதமர் இதனை கூறினார்.

 தொடர்ந்துரைத்த அவர்,

“கடிதம் எனக்கு கிடைத்துள்ளது. அதற்குரிய பதிலை நான் உரியவருக்கு அனுப்புவேன். எவ்வாறாயினும் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். தொடர்ந்தம் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். இந்த விடயத்தில் கரிசனையுடனேயே நாங்கள் இருக்கின்றோம்.

“லசந்த விக்கிரமதுங்கவின் மகளின் கவலையை நாங்கள் நன்கு உணர்கின்றோம். 

“ஜனாதிபதி இது தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றார். தொடர்ந்தும் விசாரணைகள முன்னெடுத்தோ தேவைப்பட்டால் புதிய விசாரணைகளை ஆரம்பித்தோ சாட்சியங்களை மேலும் சேகரித்து நீதியை நிலைநாட்ட நடவடிக்கைக எடுப்போம்.

“இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் உள்ளன. பல நிறுவனங்கள் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன” என்றார்.

Related posts

நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமானது என கூறப்படும் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை இடைநிறுத்த உத்தரவு

wpengine

மன்னார், பூநகரி, தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் 24 – 27 வரை ஏற்றுக்கொள்ளப்படும்,.

Maash

கண்டி சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமின் இரட்டை வேடம்

wpengine