பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இது ஒரு தனிநபர் உறுப்பினரின் பிரேரணையாக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, குறித்த பிரேரணையை முன்வைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.