செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை (6) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா மகாவித்தியாலயத்தை அண்மித்து நிறுத்திவிட்டு, மீண்டும் புறப்பட தயாரான போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

தீயை கட்டுப்படுத்த மோட்டர் சைக்கிள் சாரதி மற்றும் வீதியால் சென்றோர் முயன்ற போதும் மோட்டர் சைக்கிள் பகுதியளவில் எரிந்து நாசமாகிய பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

Related posts

“கம்பெரலிய” மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டங்களின் ஊடாக கிராம மட்டங்களில் ஆழமாக காலூன்றுவோம் ரணில்

wpengine

மலைப்பாதையிலிருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ் – 27 பேர் பலி!

Editor

கப்பல் வராத துறைமுகம், விமானம் தரையிறங்காத விமான நிலையம்! நல்லாட்சி அரசை பற்றி மஹிந்த பேச முடியாது.

wpengine