செய்திகள்பிரதான செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு இந்த அரசாங்கம் நெல்லுக்கான விலைகளை நிர்ணயித்துள்ளது .

விவசாயிகளின் நெற்செய்கைக்கான செலவு என்ன, விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில் கொள்ளாமல், விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு இந்த அரசாங்கம் நெல்லுக்கான விலைகளை நிர்ணயித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகார சபையின் செயலாளர் நிரஞ்சன் தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாரிய நஷ்டங்களை எதிர்கொண்ட விவசாயிகள் அதிலிருந்து மீளமுடியாத நிலையில் உள்ளபோது அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

நாங்கள் நெல் கொள்வனவு செய்வதற்காக தேசிய ரீதியில் உள்ள சங்கங்களுடன் இணைந்து விலையொன்று நிர்ணயம் செய்யப்பட்டு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஏக்கருக்கு 25 மூடைகள் என்ற வகையிலேயே இந்த நெல் விலை மிகவும் குறைந்ததாக தீர்மானிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் அதனை விட குறைவான நெல் விலையை அறிவித்துள்ளது.

வெள்ள அனர்த்தம் காரணமாக விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை நாடளாவிய ரீதியில் எதிர்கொண்டுள்ளனர். ஏக்கருக்கு சிலருக்கு நான்கு ஐந்து மூடைகளும் அறுவடை கிடைத்துள்ளது. 

ஆனால், அரசாங்கம் அவற்றினை கருத்தில் கொள்ளவில்லை. உர விலைகளை குறைக்காமல், எண்ணெயின் விலையினை குறைக்காமல், நெல் விலையை மட்டும் குறைத்து கொள்வனவு செய்ய முனைகிறது.

முழு நம்பிக்கை கொண்டே இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சிக்கு கொண்டுவந்தோம். விவசாயிகளை கருத்தில்கொள்ளுங்கள் என்றார். 

Related posts

பிரதேச செயலக உத்தியோகத்தரின் காடைத்தனம்! கணவன்,மனைவி வைத்தியசாலையில்

wpengine

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி

wpengine

பின்புற பாக்கெட்டில் பேர்ஸ் வைப்பவரா நீங்கள்:திடுக்கிடும் தகவல்

wpengine