உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஷேக் ஹசீனாவின் வீட்டை தீக்கிரையாக்கிய பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்!

பங்களாதேஷில் எதிர்ப்பாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்ப வீட்டையும், அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களின் வீட்டையும் நாசப்படுத்தி, தீ வைத்து எரித்தனர்.

கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் அவரை வெளியேற்றியதில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஹசீனா இந்தியாவில் இருந்து சமூக ஊடகங்கள் மூலம் நாட்டிற்கு உரையாற்றுவார் என்ற செய்தியால் இந்த அமைதியின்மை ஏற்பட்டது.

20 ஆண்டுகளாக பங்களாதேஷின் பொறுப்பில் இருந்த 77 வயதான ஹசீனா, ஒரு சர்வாதிகாரியாகக் முத்திரை குத்தப்பட்டார்.

இந்த நிலையில் புதன்கிழமை (06) மாலை எதிர்ப்பாளர்கள் டாக்காவில் அமைந்துள்ள ஹசீனாவின் மறைந்த தந்தையும் பங்களாதேஷின் ஸ்தாபயத் தலைவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டை தீயிட்டு எரிந்ததுடன், ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து நொறுக்கியுள்ளனர்.

ஹசீனாவின் தந்தை ஒரு சுதந்திர நாயகனாக பரவலாகப் பார்க்கப்படுகிறார், ஆனால் அவரது மகள் மீதான கோபம் ஹசீனாவின் விமர்சகர்களிடையே அவரது பாரம்பரியத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தியது.

ஒரு காலத்தில் ஜனநாயக சார்பு சின்னமாகப் போற்றப்பட்ட ஹசீனா, பதவியேற்ற பின்னர் தனது நற்பெயருக்கு கலங்கும் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டார்.

அவர் தேர்தல்களில் முறைகேடு செய்ததாகவும், அவரை விமர்சிப்பவர்களை சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார், மேலும் அவரது நிர்வாகம் ஊழல் நிறைந்ததாக பரவலாகக் காணப்பட்டது.

கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட மாணவர்களின் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியதற்காக அவர் பிடியாணை உத்தரவினை எதிர்கொள்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச் சென்றாலும், அவர் மீதும் அவரது அவாமி லீக் கட்சியினர் மீதும் கோபம் தணியவில்லை.

இதனால், புதன்கிழமை (05) எதிர்ப்பாளர்கள் மூத்த அவாமி லீக் தலைவர்களின் வீடுகளையும் வணிகங்களையும் சேதப்படுத்தி எரித்தனர்.

Related posts

கிளிநொச்சி கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர் படகில் தவறி விழுந்து உயிரிழப்பு..!

Maash

உள்ளூராட்சித் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி..!

Maash

ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே ஆட்டுடன் உடலுறவு

wpengine