அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

நெல் கொள்வனவை முன்னிட்டு இன்று (06) முதல் களஞ்சியசாலைகள் திறப்பு.!

நெல் கொள்வனவை முன்னிட்டு இன்று (06) முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

அறுவடை இடம்பெறும் கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த குறிப்பிட்டார்.

நெல் கொள்வனவிற்காக திறைசேரியில் இருந்து 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லுக்கான நிர்ணய விலைகள் நேற்று (05) அறிவிக்கப்பட்டன.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல் 120 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சம்பா நெல் 125 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 132 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்திருந்தார்.

Related posts

மன்னார்,வவுனியா வீதியில் கடல் அலை

wpengine

வவுனியாவில் பெற்றோல் தாக்குதல்! வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் விஜயம்

wpengine

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் காலை 10.10 மணியளவில் துபாய் பயணமானார் .

Maash