கிளிநொச்சி டிப்போ சந்தியிலுள்ள இராணுவ நினைவுத்தூபி வளாகத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று ( 5 ) திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் சிறுவர் பூங்காவினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள WhatsApp இல் இணைந்துக்கொள்ளுங்கள் :https://chat.whatsapp.com/KIBTp46NeuX2IwhBH9jySJ
![](https://vanninews.lk/wpvn/wp-content/uploads/2025/02/25-67a442b722c27.jpg)