அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மோசடி செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது.

கடந்த கால ஊழல் மோசடிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஊழல்வாதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை கொழும்பில் (Colombo) நேற்று (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேரும் தெரிவிக்கையில், ”அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது. சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது ஊழல்வாதிகள் அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

எவரையும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. ஊழல்வாதிகளை மக்கள் அறிவார்கள், அவர்களின் ஊழல் மோசடிகளையும் அறிவார்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகவும், கடந்த அரசாங்கங்களைப் போன்று சட்டத்தை தமது விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த போவதில்லை.

வரவு செலவுத் திட்டத்தை தொடர்ந்து கிளின் சிறிலங்கா செயற்திட்டம் சகல அமைச்சுக்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும். ஊழல் ஒழிப்பு என்பது கிளின் சிறிலங்கா செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகும். இதற்கமைய கடந்த கால ஊழல் மோசடிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து கூட்டணியமைக்க முயற்சிக்கிறார்கள். தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆணையை மலினப்படுத்த இடமளிக்க போவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மன்னார் நகர சபையின் தீல்லுமுல்லு! பிரதேச மக்கள் விசனம்

wpengine

நேற்று மெக்ஸிக்கோவில் 6.2 ரிச்டர் பூமியதிர்ச்சி

wpengine

முறைகேடுகள், ஓரவஞ்சகத்தை உடன் நிறுத்த வேண்டும்! பௌத்ததேரர் அரசை எச்சரித்தார்.

wpengine