உலகச் செய்திகள்செய்திகள்விளையாட்டுவெளிநாட்டு செய்திகள்

என்னைவிட யாரையும் சிறப்பாக பார்க்கவில்லை! நான்தான் வரலாற்றில் சிறந்த வீரன் – ரொனால்டோ.!

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்றில் தன்னை விட சிறந்த வீரர் யாரும் இல்லை என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார். போர்த்துக்கல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போதைய காலகட்டத்தில் ஜாம்பவான் வீரராக உள்ளார்.

ஆனாலும், சிறந்த வீரர் லியோனல் மெஸ்ஸியா அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோவா இருவரில் யார் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே நிலவி வருகிறது. இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ஜாம்பவான்களான மாரடோனா, பீலே ஆகியோரை விட தன்னை முன்னிலைப்படுத்தி சிறந்த வீரர் என்று கூறியுள்ளார்.

ரொனால்டோ கூறுகையில், “நான் இதுவரை இருந்த வீரர்களில் மிகவும் முழுமையான வீரர் என்று நான் நினைக்கிறேன். அது என் கருத்து. இது ரசனையின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் அது நான்தான் என்று நினைக்கிறேன்.

கால்பந்தில் நான் எல்லாவற்றையும் செய்கிறேன். நான் நன்றாக Heading செய்வேன், செட் பீஸஸ்களை நன்றாக எடுக்கிறேன், எனது இடது கால் மூலம் சிறப்பாக ஷூட் செய்கிறேன், வேகமாகவும், வலிமையாகவும், உயரவும் குதிக்கிறேன்” என்றார்.

மேலும் அவர், “ரசனை என்பது ஒன்றுதான். இதை சொல்வது அது இது என்றில்லாமல், நீங்கள் மெஸ்ஸி, பீலே அல்லது மாரடோனாவை விரும்பினாலும் நான் அதை கேட்கிறேன், மதிக்கிறேன். ஆனால், கிறிஸ்டியானோ முழுமையானவர் அல்ல என்று சொல்வது பொய். நான் மிகவும் முழுமையானவன். என்னை விட யாரையும் நான் சிறப்பாக பார்க்கவில்லை. அதை நான் முழு மனதுடன் உங்களுக்கு சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ரொனால்டோ ஐந்து முறை Ballons d’Or விருதுகள் உட்பட எண்ணற்ற பிற கௌரவங்களை வென்றுள்ளார். மேலும் பல சாதனைகளையும் ரொனால்டோ படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தீபாவளிக்கு எடுத்த புது துணிகளுடன்! திண்டுக்கல்லில் 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் மாயம்

wpengine

ISIS அமைப்பின் முஸ்லிம் உறுப்பினர் புதுடில்லியில் தங்கியிருந்த போது கைது.

wpengine

சவுதியில் பாகிஸ்தானிய திருநங்கைகள் இருவர் பொலிஸாரால் அடித்துக் கொலை!

wpengine