அனர்த்தத்தில் பாதிப்பிற்குள்ளான விவசாய நிலங்களை புதுப்பிக்கவும் மற்றும் அதற்கான நட்ட ஈடுகளை பெற்று கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறிப்பாக இழந்தவைகளுக்கு நட்டஈடு தருதல் என்பதை காட்டிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு தேவைக்கான தீர்வாக, உற்பத்திகளை பெருக்க வேண்டிய அவசியம் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆகவே, விவசாய நிலங்களை வளப்படுத்தவும் மீண்டும் உரிய காலத்துக்கான பயிர்செய்கையை மேற்கொள்ளவும் தேவையான வசதிகள் விவசாயிகளுக்கு பெற்று கொடுக்கப்படும் என விவசாய அமைச்சர் கூறினார்.
எனவே அதற்கு, மொத்தமாக பாதிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சிறுபோக பயிர்செய்கை என பகுதிகளாக கொண்டு அதற்கான நிவாரணங்களை பெற்று கொடுக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.