மன்னார்

மன்னார் மாவட்ட செயலகத்தில் : புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!

2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வானது இன்று (01) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 8.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

அத்துடன் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத் திட்ட நிகழ்வில் உத்தியோகத்தர்கள் குறித்த நிகழ்வின் போது நேரலை ஊடக இணைந்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர்கள் , பதவிநிலை அலுவலர்கள்,மாவட்ட செயலக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Related posts

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

Editor

‘தமிழரசுக் கட்சிக்குள் ஒரு சில கோமாளிகள்’ சாணக்கியன்

Editor

மன்னார் நகர சபையின் செயற்பாட்டால் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு..! MANNAR NEWS

Editor