அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம் – நிர்மாணப் பணிகளை பார்வையிட நேரில் கள விஜயம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் புத்தளம், நாகவில்லு பிரதேசத்தின், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலத்தில், சுமார் 07 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும், 3 மாடிக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை தலைவர் ரிஷாட் ஞாயிற்றுக்கிழமை (29) நேரில் சென்று பார்வையிட்டார்.

மேற்படி விஜயத்தின் போது, வகுப்பறைக் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கிய அவர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ், பாடசாலைக்குத் தேவையான இலத்திரனியல் உபகரணங்களையும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வின் போது, மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.ரீ.எம். தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ரிஜாஜ் மற்றும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் நாசர், பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட கட்சியின் நாகாவில்லு கிளை முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

YouTube video 👇

Related posts

அரச வர்த்தக பொது கூட்டுதாபனத்தின் அனுசரணையோடு புலமை பரிசில் வகுப்பு

wpengine

 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம்..!

Maash

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான இடம்மாற்றங்கள் வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம்.

Maash