பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

மரண பயத்தை ஏற்படுத்திய பேருந்து – எடுக்கப்பட்ட நடவடிக்கை ~ JAFFNA NEWS

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகத்திற்கு அறிவித்துள்ளார். 

தனியார் பேருந்து விதிகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. 

இதற்கு அமைவாக முதல் கட்டமாக 29 sri 7911 என்ற தனியார் பேருந்தின் உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன் சாரதி, நடத்துனர் மற்றும் சிற்றூர்தியின் உரிமையாளர் மேலதிக நடவடிக்கைக்காக உரிய ஆவணங்களுடன் அதிகார சபைக்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி!

Editor

பிரதேச செயலக உத்தியோகத்தரின் காடைத்தனம்! கணவன்,மனைவி வைத்தியசாலையில்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் மீள்குடியேற்றதை தடுக்கும் முஸ்லிம் அமைச்சரும்,தமிழ் அரசியல்வாதிகளும்

wpengine