Breaking
Sun. Nov 24th, 2024

சம்சுங் நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட வன்பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

Galaxy Note 6 எனும் குறித்த கைப்பேசியில் சில புதிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கிய அம்சமாக IrisScanner காணப்படுகின்றது.

Iris Scanner என்பது ஓர் உயிரியல் தொழில்நுட்பமாகும். இதன் உதவியுடன் ஒருவரது கண்களை ஸ்கான் செய்ய முடியும்.

இதன் ஊடாக இரத்தம், இரத்த நாளங்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.625.0.560.350.160.300.053.800.668.160.90

இவ் வசதியானது ஐரோப்பிய நாடுகளில் Samsung Iris மற்றும் Samsung Eyeprint ஆகிய நாமங்களை அடிப்படையாகக் கொண்டு பிரபல்யப்படுத்தப்படவுள்ளது.

இதற்கு மேலாக Qualcomm Snapdragon 823 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM,256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியிருக்கும்.

இதேவேளை இக் கைப்பேசியானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *