பிரதான செய்திகள்

மன்னார் இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவில் இருவர் மீது வாள்வெட்டு!

மன்னாரில் இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்றாம்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவரும் பெண்ணொருவரும் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

நேற்று (09) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

பின்னர், காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியாறு பகுதியைச் சேர்ந்த  50 வயதான பெண்ணும், 27 வயதான ஆணுமே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தாக்குதல் தொடர்பில் பாலியாறு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

அமைச்சர் றிசாத் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பையடுத்து மறிச்சுக்கட்டி, பாலைக்குழி மக்களின் விவசாயக் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்க நடவடிக்கை

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

நேற்றுவரை முஸ்லிம்களின் 7 ஜனாஷா அடக்கம்

wpengine