Breaking
Sat. Nov 23rd, 2024

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக எதிர்காலத்தில் நீர் ஆதாரங்கள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட  நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொதித்தாரிய நீரை பருகுவதன் மூலம் இந்நோய்களை தவிர்க்க முடியும் என அதன் உதவி செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த வறட்சியான காலத்தில், சாதாரண நீர் ஆதாரங்கள் வற்றி கிடப்பதால், குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறம் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் போது, ​​இந்த நிலை தீவிரமடைந்து வருகிறது. கிணறு, நீர் ஊற்றுக்கள் உள்ளிட்ட நீர்விநியோக ஆதாரங்களில் இருந்து தண்ணீரை பெற முயல்கின்றனர். அவை தற்போது வற்றியுள்ளதால் அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, எதிர்காலத்தில், இந்த தண்ணீரை இந்த மக்கள் பயன்படுத்தும் போது அவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இல்லை என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், குறைந்தபட்சம் தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்கவும்’ என்றார்.

A B

By A B

Related Post