பிரதான செய்திகள்

மூத்த கலைஞரும், ஒலிபரப்பாளருமான விமல் சொக்கநாதன் காலமானார்!

மூத்த கலைஞரும் ஒலிபரப்பாளருமான விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர், தான் எழுதிய ‘லண்டனிலிருந்து விமல்’ என்ற நூலை அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதன் பின்னர், கொழும்பில் நடைபெற்ற உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீதின் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூலின் அறிமுக விழாவையும் தலைமையேற்று நடத்தி இருந்தார்.

போர்க்காலத்தில் வடக்கு-கிழக்கு நிலைமைகள் பற்றிய செய்திகளை சிறப்பாகத் தொகுத்து வழங்கிய விமல் சொக்கநாதன் விபத்தொன்றில் அகால மரணமானார்.

Related posts

கல்முனை பிரதேச மக்களை சந்தித்து கலந்துறையாடிய அமைச்சர் றிஷாட்

wpengine

அமைச்சுப் பதவி எனக்குத் தேவையில்லை-பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்

wpengine

காணிப்பிரச்சினை விரைவில் தீர்வு கிடைக்கும்! மூன்றாம் தரப்பை கொண்டுவர வேண்டாம் அமீர் அலி

wpengine