Breaking
Sat. Nov 23rd, 2024

விரைவில் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் என்றும், எனவே தனியார் துறையை நாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அவசர கொள்வனவு எனும் பெயரில் டெண்டர் முறையில் இருந்து விலகி செயற்படுவதற்கு நேரிடும் என்றும், அதில் பணம் சுரண்டப்படுதே இடம் பெறப்போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டீசல் மாபியாக்கள், எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் உட்பட பலர் இந்த அவசர நிலையைப் பயன்படுத்திக் கொண்டு டொலர் முட்டிகளிலிருந்து கொமிசன்களை பெறத் தயாராக உள்ளனர் என்றும், மருந்துகளை கொள்வனவு செய்யும் போதும் இவ்வாறே இடம் பெற்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மருந்துகளை இறக்குமதி செய்யும் போது மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் சட்டத்தின் 58 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட டெண்டர் கொள்முதல் முறையை விடுத்து, பதிவு செய்யப்படாத மருந்துகளை இறக்குமதி செய்வதில் கையாட்களை வைத்து பெரும் கொமிஷன் பெறும் ஊழல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறே, மின்சார நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும், டீசல் மாபியாவையும், தனியார் மின் உற்பத்தி மாபியாவையும் முன்னிறுத்தி டெண்டர் இல்லாமல் மின்சாரத்தை வாங்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

இவை அனைத்தும் இரண்டு முறை மின் கட்டணத்தை 500 சதவீதத்தால் அதிகரித்துக் கொண்டே செய்யப்படுவதாகவும், இவ்வாறு அதிகரிக்கப்பட்டாலும் தொடர்ந்து மின்சாரம் வழங்க தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அவ்வாறு இல்லை என்றால் தொடர்ந்து மின்சாரம் வழங்க முடியாது என அரசாங்கம் தெரிவிப்பதாகவும், இந்நிலையில், தண்ணீரின்றி உடவளவ விவசாயிகளும் மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளும் நிர்க்கதியாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

முறையான நீர் வழங்கல் முகாமைத்துவம் இல்லை என்றும்,இது தொடர்பாக அரசாங்கத்திடம் சரியான முன்னாயத்த கணிப்பீடுகள் எதுவும் இல்லை என்றும்,எந்த புரிதலும் இன்றி தண்ணீர் பிரச்சினை நிலவுவதாகவும், விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாது என அமைச்சரவை கூட முடிவு செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சித தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை என்றும், தற்போதைய அரசாங்கத்தால் பாடசாலை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க முடியவில்லை என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் ஒவ்வொரு பாடசாலை குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு ஸ்மார்ட் குடிமகன்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் 74 ஆவது கட்டமாக அநுராதபுரம் வித்யாதர்ஷ தேசிய பாடசாலைக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று இன்று (02) வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ள 56 வைத்தியசாலைகளுக்கு 171,966,900 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்களும், பாடசாலைகளுக்கு ரூபா 349,200,000 பெறுமதியான 73 பேருந்துகள் மற்றும் 33 பாடசாலைகளுக்கு 29,033,650 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களும் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளன.

A B

By A B

Related Post