பிரதான செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட இசைக் கருவிகளை தீயிட்டு எரித்த தலிபான் அரசு!

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தலிபான் அரசாங்கம் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. 

சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசையை இசைப்பதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்கக்கேடானதாகக் கருதி, பறிமுதல் செய்யப்பட்ட இசைக்கருவிகள் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை தலிபான் தீயிட்டு எரித்தன. 

இது குறித்து, நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் ஹெராத் துறையின் தலைவர் அஜிஸ் அல்-ரஹ்மான் அல்-முஹாஜிர் தெரிவிக்கையில் ,

‘இசையை ஊக்குவிப்பது தார்மீக ஊழலை ஏற்படுத்துகிறது மற்றும் அதை இசைப்பது இளைஞர்களை வழிதவறச் செய்யும்’ என தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான டொலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகள் மற்றும் உபகரணங்களை தலிபார் அதிகாரிகள் எதிர்த்தனர். 

இதில் ஒரு கிட்டார், மற்ற இரண்டு கம்பி வாத்தியங்கள், ஒரு ஹார்மோனியம் மற்றும் ஒரு தபேலா, ஒரு வகை டிரம் அத்துடன் ஒலி பெருக்கிகள் ஆகியவை இருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை தடைசெய்ய இடமளிக்க முடியாது

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் மௌனம்!அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆவேசம்

wpengine

ரவிராஜ் வழக்கில் விரைவில் சிலர் கைது: தாஜூடின் கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்- அஜீத் பீ. பெரேரா

wpengine