உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

26 பேரின் உயிரைப் பறித்த படகு விபத்து – பிலிப்பைன்ஸில் சம்பவம்!

பிலிப்பைன்சிலுள்ள ஏரியொன்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் Piñயn நகரில் இருந்து ஏரி வழியாக Talima; தீவிற்கு பயணிகளுடன் பயணித்த படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகில் 70 பயணிகள் பயணித்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென பலத்த காற்றுடன், கடும்மழை பெய்தமையால் படகின் ஒரு பக்கத்தில் எடை அதிகரித்த காரணத்தினாலேயே குறித்த படகு ஏரியில் மூழ்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடபட்டுள்ளனர்.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 42 பேர் மாத்திரம் பயணிக்கக்கூடிய படகில் 70 பேர் பயணித்தமையே விபத்துக்கான காரணம் என்றும் பயணிகள் யாரும் உயிர்காக்கும் கவச உடை அணிந்திருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

Related posts

மன்னம்பிட்டிய பஸ் விபத்து நடந்தது என்ன?

Editor

சுனாமி வீடமைப்பு திட்டத்தின் அவலநிலை! முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம்

wpengine

மனைவி மீது கணவன் சந்தேகம்! உறவை கொல்லும்

wpengine