பிரதான செய்திகள்

தொலைபேசிகளைத் திருடிய இராணுவ வீரர்கள் இருவர் கைது!

பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இரண்டு இராணுவ வீரர்கள் அத்துருகிரிய பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றின் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகளை திருடிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் மது அருந்துவதற்காக விழா மண்டபத்துக்குச் சென்றபோது, அருகில் உள்ள அறையில் யுவதி ஒருவரும் இளைஞனும் உறங்கிக் கொண்டிருந்தபோதே சந்தேக நபர்களில் ஒருவர் அறைக்குள் நுழைந்து கையடக்கத் தொலைபேசிகளைத் திருடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய வீரர் ஒருவரும், செவனகல மயூரகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய வீரர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மகனின் கார் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் . .!

Maash

யானை சின்னல் எதிர்வரும் பொதுத்தேர்தலில்!

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கருணாவுடன் சேர்ந்து மஹிந்த அணிக்கு ஆதரவு

wpengine