பிரதான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக டளஸ் அழகப்பெருமவை நியமிக்க சுதந்திர மக்கள் சபை தீர்மானம்!

பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், இதனை ஆதரிக்கும் எவருடனும் கூட்டணி அமைக்க சுதந்திர மக்கள் சபை தயாராகி வருவதாக தெரியவருகிறது.

இது குறித்து எதிர்வரும் காலங்களில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவள தெரிவித்துள்ளார்.

டளஸ் அழகப்பெரும நாட்டின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிக்க தகுதியான ஊழல்,மோசடிகளில் சம்பந்தப்படாத நபர் எனவும் இதனால், அவரை நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்ய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

வெள்ளவத்தையில் கரை ஒதுங்கிய மீன்! பலர் அச்சம்

wpengine

சந்திரிக்கா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இரகசிய சந்திப்பு

wpengine

Mahargama Cancer Hospital urgent need a Pet-Ct-Scanner Machine -needed Rs. 200 million -please help

wpengine