Breaking
Sun. Nov 24th, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச சேவைகள் பலவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானியில் அறிவித்துள்ளார்.மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்காக அத்தியாவசியமான சேவைகளுக்கு பாதிப்பு அல்லது இடையூறுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மின்சாரம் விநியோகம் தொடர்புடைய அனைத்து சேவைகள், பொற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

A B

By A B

Related Post