பிரதான செய்திகள்

இலங்கையில் 05 இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சினால் தடைவிதிக்கப்பட்டிருந்த ஐந்து முஸ்லிம் அமைப்புகளின் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மிய்யத்து அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா, ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், லங்கா தவ்ஹீத் ஜமாஅத், ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் தடையே இவ்வாறு நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே குறித்த அமைப்புகள் தங்கள் செயற்பாடுகளை வௌிப்படையாக மேற்கொள்ளவும், நிதி மூலாதாரங்கள் குறித்த விபரங்களை வௌிப்படைத்தன்மையுடன் பேணிக் கொள்ளவும் பாதுகாப்பு அமைச்சுக்கு உறுதிமொழி அளித்துள்ளன.

Related posts

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மருந்து தொகையுடன் ஒருவர் கைது!

Editor

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக மஹிந்த அமரவீர தெரிவு

wpengine

ACMC சார்பாக தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு ரிஷாட்MP தலைமையில், நேற்று (11) இடம்பெற்றது.

Maash