Breaking
Sun. Nov 24th, 2024

தெஹிவளை – மல்வத்தை வீதி பகுதியில் இயங்கி வந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நிலையத்தை பொலிஸார் திடீர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.குறித்த நிலையம் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையில் பதிவு செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ள பொலிஸார், சட்டவிரோதமாக மையத்தை நடத்தி வந்த ஒருவரும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தில் 34 பேர் புனர்வாழ்வு பெற்று வந்த நிலையில் அவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச வசதிகள் இல்லை என்றும், தற்போது புனர்வாழ்வு பெற்று வரும் நபர்கள் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 50 மற்றும் 51 வயதுடைய தெஹிவளை மற்றும் பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

A B

By A B

Related Post