இலங்கை சுற்றுலாத் துறையில் மிக முக்கிய தளமாக கல்பிட்டி பிரதேசம் புகழ்பெற்று வருகின்றது. இருப்பினும் அங்கு காணப்படும் சில தேவைகள் நிவர்த்தி செய்யப்படாமையினால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்து வருகின்றன.
இந்த விடயகங்ளை ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்கான விசேட கூட்டம் ஒன்று கற்பிட்டி கண்டல்குளி “Wind Beach” சுற்றுலா விடுதியில் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. கல்பிட்டி பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பின்வரும் விடயங்கள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
1தேத்தாவாடி தொடக்கம் கண்டல்குளி வரையிலான பாதை கல்பிட்டி பிரதேச சபை நிதியில் புனரமைப்பு செய்யும் படி பிரதேச சபை செயலாளருக்கு பொறுப்பளிக்கப்பட்டது.
2சுற்றுலா பயணிகளை டொல்பின் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்லும் படகுகளை நிறுத்துவதற்கான மிதக்கும் துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
3சுற்றுலா பயணிகளுக்கு இரவு நேர முகாம் நடத்துவதற்காக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் 1 ஏக்கர் ஒதுக்கப்பட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது
4கண்டல்குழி கரையோரப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடமாடும் பொலிஸ் முகாம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கல்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.
கரையேரங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் புத்தளம் மாவட்ட செயலாளர், கல்பிட்டி பிரதேச செயலாளர், கல்பிட்டி மற்றும் நுரைச்சோலை பகுதிகளின் பொலிஸ் பொறுப்பதிகாரிகள், சுற்றுலா துறை பணிப்பளர், திணைக்கள அதிகாரிகள் மற்றும் சுற்றுலா விடுதிகளின் முகாமையாளர்கள் என பலர் இக்கூட்டத்தில் பங்கு பற்றினர்.