பிரதான செய்திகள்

வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!

வட மாகாண சுகாதாரச் சேவைகள் பணிமனைக்கு முன்பாக டெங்குப்  பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும்  ஊழியர்கள் இன்று  கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனத்தை அமுல்படுத்துமாறு கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் போது தாம் ஏழு வருடங்களுக்கு மேலாக டெங்கு நோயைக்  கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும்,  தமக்கு இதுவரைகாலமும்  நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்  இதுவரைகாலமும் ஊதியமாக 22,000 ரூபாயே  கொடுக்கப்படுவதாகவும், இதனைக் கொண்டு வாழ்க்கையை நடத்த முடியாமல்  தாம் தவித்து வருவதாகவும் எனவே அதிகாரிகள் இதனைக் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விடத்தல்தீவு புதிய இறங்குதுறை; மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் றிசாத் நடவடிக்கை

wpengine

வைத்தியசாலைக் குழு அங்கத்தவராக மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம்

wpengine

​2022 ஆம் ஆண்டு வங்கி விடுமுறை நாட்களை அதிகரித்தார்.

wpengine