அஸ்வெசும திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை கணினி கட்டமைப்பிற்குள் உள்ளடக்குவதற்காக பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன்(13) நிறைவடைவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
குறித்த திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான கால அவகாசம் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.
இதுவரை 9 இலட்சத்து 68 ஆயிரம் மேன்முறையீடுகளும் 17500 எதிர்ப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.