பிரதான செய்திகள்

தம்புள்ளை சுற்றுலாத்துறை பிரதிநிதிகளை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

தம்புள்ளை பிரதேச சுற்றுலாத்துறையுடன் தொடர்பான பிரதிநிதிகளை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (11) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியதாவது,

எமது நாட்டில் சுற்றுலாத் துறையில் நிலவும் பாரியதொரு பிரச்சினை தேசிய சுற்றுலா கொள்கையொன்று இல்லாதது என்றும், நியமிக்கப்படும் அமைச்சரினதும் மாறி மாறி நியமனமாகும் அமைச்சர்களது ஒரு சில பிரபலங்களுக்கும் அடிமைப்பட்ட துறையாக இது இருந்து வருவதாகவும்,இதில் ஈடுபடும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை மறந்து,சிறியதொரு பலமிக்க குழுவினரை கோலோட்சும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனை தோற்கடிக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

சுற்றுலாக் கொள்கை உருவாக்கம் இடம்பெறும் கோந்திர நிலையங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் சுற்றுலாத் துறையில் ஈடுபடும் நபர்கள் இணைக்கப்பட்டு, கொள்கை உருவாக்கும் செயல்முறைக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும்,பிரபல அரசியல் குடும்பத்துடன் தொடர்புடைய சிலர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே இலக்கு வைத்து,தங்கள் சொந்த நலனுக்காக இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதனால், இது சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள சாமானிய மக்களுக்கு பெரும் பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பயங்கரவாத ஒழிப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற இன்டர்போல் இலங்கைக்கு

wpengine

அமைச்சரவை மாற்றம் வர்த்தகமானி அறிவித்தல்

wpengine

முதல் தடவை இலங்கைக்கான விஜயம் துருக்கி அமைச்சர்

wpengine