(பழுலுல்லாஹ் பர்ஹான்)
தென் மாகாணத்தில் மிகவும் சிறப்பாக இயங்கிவரும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் பாடவிதானங்களுக்கு புறம்பாக மாணவர்களின் அறிவு விருத்தியில் பங்கெடுக்கும் பல நிகழ்ச்சிகளில் 2006ம் ஆண்டு ஆரம்ப பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அறிவுக் களஞ்சியப் போட்டி எனும் நிகழ்சி இது வரையில் 146 சுற்றுக்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றது.
காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி மாணவர்களில்; இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாதமிரு முறை நடைபெற்ற மேற்படி அறிவுக் களஞ்சியப் போட்டி நிகழ்ச்சிகளில் 3000த்திற்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சிகளின் பயன்கள் மற்ற மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில்; இதனை அச்சிட்டு வெளியிட்டால் நல்லது என இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி நிர்வாகம் கருதியதால் இதனை அச்சிட நிர்வாகம் முடிவு செய்தது.
அதனடிப்படையில் முதற்கட்டமாக நடைபெற்று முடிந்த 100 அறிவுக் களஞ்சியப் போட்டிகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் சந்தர்ப்பத்திற்கேற்ப வினவப்பட்ட வினாக்களைத் தவிர்த்து அரசியல்,விஞ்ஞானம்,விளையாட்டு, பொது அறிவு,நுண்ணறிவு,இஸ்லாமிய நாகரீகம்,தமிழ்மொழி,அரபு இலக்கணம், என பல அம்சங்களை உள்ளடக்கி 1500ற்கும் மேற்பட்ட முக்கிய கேள்வி பதில்களை ஒன்றினைத்து பொது அறிவுப் பொக்கிஷம் பாகம்-01 எனும் 222 பக்கங்களைக் கொண்ட ஒரு பொது அறிவுப் பொக்கிஷ நூலை காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அதன் 5வது பட்டமளிப்பு விழாவின் போது வெளியிட்டது.
மேற்படி பொது அறிவுப் பொக்கிஷ நூலை பெற விரும்புவோர் நேரடியாகவோ அல்லது தபாலிலோ பெற முடியும் எனவும் இதன் விலை 280.00 ரூபாய் எனவும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.
குறித்த பொது அறிவுப் பொக்கிஷம் எனும் நூலை மொத்தமாக பெற விரும்பும் அரச,தனியார் பாடசாலைகள்,பொது நூலகங்கள்,அரபுக் கல்லூரிகள்,புத்தக நிலையம் என்பவற்றிக்கு விஷேட விலை கழிவுகளுடன் இந் நூல் வழக்கப்படும் எனவும் இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0774325044,0912243672, 0912222037 போன்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.