பிரதான செய்திகள்

அமைச்சர் ஹாபீஸ் நஷீர் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது.

சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் நுவரெலியா நோக்கி பயணித்த ஹெலிகொப்டர் மோசமான வானிலை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று காலை திடீரென தரையிறக்கப்பட்டது.

மழையினால் கொத்மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால், ஹெலி தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், அமைச்சரும் விமானியும் சுமார் 45 நிமிடங்கள் விமானத்தில் தங்கியிருந்தனர்.

நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரானதையடுத்து , நுவரெலியாவிலிருந்து பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் ஏற்றிக்கொண்டு ஹெலிகொப்டர் மட்டக்களப்புக்கு புறப்பட்டுச் சென்றதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

Related posts

காலியில் முஸ்லிம் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

wpengine

இந்திய பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, இன்று ஜனாதிபதி தலைமையில்.

Maash

முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்ட அசம்பாவிதங்கள்

wpengine