Breaking
Sun. Nov 24th, 2024

மலையகத்தில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அந்தவகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழை காரணமாக மரக்கறிகள் அழுகி போவதற்கான அபாயம் உள்ளதாக விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்பட்டிருக்கும் ஆனால். இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகள் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

மலையகத்தில் இவ்வாறான காலநிலையால் மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில்,

லீக்ஸ் ஒரு கிலோ விலை – 200 ரூபா
பாவக்காய் ஒரு கிலோ விலை – 200 ரூபா
வெண்டிக்காய் ஒரு கிலோ விலை – 190 ரூபா
புடலங்காய் ஒரு கிலோ விலை – 180 ரூபா
தக்காளி ஒரு கிலோ விலை – 360 ரூபா
கோவா ஒரு கிலோ விலை – 320 ரூபா
கறிமிளகாய் ஒரு கிலோ விலை – 480 ரூபா
கத்திரிக்காய் ஒரு கிலோ விலை – 250 ரூபா
நுவரெலியா உருளை கிழங்கு ஒரு கிலோ விலை – 290 ரூபா
போஞ்சி ஒரு கிலோ விலை – 600 ரூபா
பச்சைமிளகாய் ஒரு கிலோ விலை – 500 ரூபா
கரட் ஒரு கிலோ விலை – 440 ரூபாவிலிருந்து 480 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

A B

By A B

Related Post